கரோனா லாக்டவுனால் ஒட்டுமொத்தமாக லாக் ஆகி கிடப்பது நாடு மட்டுமல்ல; நம் வீட்டு இளைஞர்களும் தான். அம்மாக்கள், தங்கைகள் என அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து பழைய சீரியல்களை ரீபிட் மோடில் பார்த்துக்கொண்டு ரிமோட்டை மறைத்து விளையாடுவதால், ஊரடங்கில் வெளியில் செல்லும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வீட்டில் தொல்லை தாங்காமல் வெளியே சென்றால், போலீஸார் வீட்டு வாசலிலேயே லத்தியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள், யார் கண்ணிலும் படாமல் மலையடிவாரத்திற்குச் சென்று விளையாடலாம் என்று ஒருமனதாக முடிவு எடுக்கிறார்கள்.
அதன்படி கையில் கேரம் போர்டு, கால்பந்து, கிரிக்கெட் பேட் என சகல விளையாட்டுப் பொருள்களையும் எடுத்துச் சென்று மலையூர் மம்பட்டியான் போல, ஒளிவுமறைவாக தங்களது பொழுதுகளைக் கழிக்கின்றனர். தற்போது அதற்கும் குண்டு வைத்துள்ளது ட்ரோன் எனும் வில்லன்.
வெளியில் வராதீங்க... என்று பல முறை சொல்லியும் கேட்காத மக்களை சைலன்டாக அமுக்க காவல் துறையினர் எடுத்த புதிய முயற்சி தான், ட்ரோன் கேமரா. மக்கள் கூடும் இடத்திற்குச் செல்லாமலேயே அவர்களை மிரட்ட முடியும் என்பதே இதன் ஸ்பெஷாலிட்டி.
சமீபத்தில் திருப்பூர் இளைஞர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கேரம் விளையாடி ட்ரோனில் சிக்காமல் இருக்க, அவர்கள் செய்த அலப்பறையான வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. தற்போது அவர்களை பீட் செய்திருக்கிறார்கள், சேலம் இளைஞர்கள்.
இதையும் படிங்க: பெரியகுளத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்