ETV Bharat / state

'8 வழிச் சாலை விவகாரத்தில் காவல்துறை மிரட்டுகிறது' - அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு - போலீஸ் மிரட்டல்

எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க கூடாது என்று காவல்துறை மிரட்டுவதாக மனித உரிமை அமைப்புகளின் தேசியக்கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

8 lane expressway, a marx , அ மார்க்ஸ், 8 வழி சாலை,
author img

By

Published : Feb 1, 2019, 10:02 AM IST

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில், 8 வழி சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது . இதில் 32 விவசாய மற்றும் மனித உரிமைகள் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்ஸ், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளை சந்திக்கச் சென்றபோது மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், அதேபோல் சேலத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு இந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததையும் காவல்துறையினர் தடுத்துவிட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

அந்த தடையையும் மீறி செய்தியாளர் சந்திப்பு வேறு ஒரு இடத்தில் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், இந்த சந்திப்பிற்கு இடம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் வெறும் ஆறே நாளில் இந்தத் திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கிய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு எந்தப் பகுதியிலும் இருந்து வந்து விடக்கூடாது என தமிழக அரசு நினைப்பதும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இனி வரும் நாட்களில் 8 வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு செயல்படாமல் இருக்க அரசு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளை முறியடித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு விவசாயிகளின் நலனை பாதுகாக்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப்படும் என்றும் மார்க்ஸ் தெரிவித்தார்.

Intro:சேலம் - சென்னை எட்டு வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க கூடாது என்று காவல்துறை மிரட்டுவதாக எட்டு வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ் சேலத்தின் தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் இருந்து சென்னை வரை அமைக்கப்பட உள்ள எட்டு வழி சாலை விளை நிலங்களை அழித்து அமைக்கப்பட உள்ளதாக விவசாயிகள் தமிழக அரசு மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள் .

8 வழி சாலை அமைக்க கூடாது என்று சேலம் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் .

கடந்த ஒரு வாரமாக எட்டு வழி சாலை அமைய உள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகளை தனித்தனியே அழைத்து தாசில்தார் அளவில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் 8 வழி சாலை அமைக்க அமைக்க உரிய நடவடிக்கைகளை முறையாக எடுக்காமல் ஜனநாயகத்திற்கு விரோதமாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருவதாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

மார்க்ஸ் தலைமையில் சேலத்தில் என்று 8 வழி சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் 32 விவசாய மற்றும் மனித உரிமைகள் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்ஸ்," கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளை எங்கள் அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பதை போலீசார் தடுத்தனர்.

அங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்பதையும் காவல்துறை தடுத்து நிறுத்தியது. அதேபோல சேலத்தில் இன்று நகரின் மையப்பகுதியில் செய்தியாளர் சந்திப்புக்கு எங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அதை போலீசார் தடுத்துவிட்டனர். செய்தியாளர் சந்திப்பு நடத்த இடம் கொடுத்து அவர்களை காவல்துறையினர் மிரட்டி சென்றுள்ளனர்.

எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு எந்தப் பகுதியிலும் இருந்து வந்து விடக்கூடாது என தமிழக அரசு நினைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது .

வெறும் ஆறே நாளில் இந்தத் திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கி, பொதுமக்கள் விவசாயிகள் கருத்துக்களை கேட்காமலே மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று கூறினார்.

Conclusion:மேலும் 8 வழி சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு செயல்படாமல் இருக்க அரசு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளை முறியடித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு விவசாயிகளின் நலனை பாதுகாக்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் பேராசிரியர் அ. மார்க்ஸ் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.