ETV Bharat / state

காவல்துறை சோதனையில் 3 கள்ளத் துப்பாகிகள் பறிமுதல்!

author img

By

Published : Jun 12, 2019, 1:19 PM IST

சேலம்: கருமந்துறை மலைக் கிராமங்களில் நடைபெற்ற காவல்துறையினரின் சோதனையில் 3 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையடிவாரத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலை சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் மலைக் கிராமங்களில் சட்ட விரோதமாக கள்ளத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினரின் சோதனை

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகேர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து இன்று காலை கருமந்துறை மலைக் கிராமங்களில் சோதனை நடத்தினர். கிட்டதட்ட 27-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அப்பகுதியினரிடையே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை. 3 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலை அடிவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சேலத்தில் உள்ள மலை கிராமங்களில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகேர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து இன்று காஙை முதல் கருமந்துறை மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

27க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சோதனை நடத்தினர். இதில்  புதர் மறைவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்ட மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பதுங்கிஉள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.