நெல்லை: கோபால சமுத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாதி மோதல் காரணமாக அடுத்தடுத்து இருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் நேற்றிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கோபாலசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியிலிருந்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் தகராறு செய்வதாகவும், வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட மணிவண்ணன் மூதாட்டியுடன் ஒரு காவலரை அனுப்பிவைத்து விசாரிக்கக் கூறினார். இதையடுத்து மூதாட்டி வீட்டுக்குச் சென்ற காவலர் தகராறில் ஈடுபட்ட நபரை அழைத்து எச்சரிக்கைவிடுத்து, பிரச்சினையைச் சுமுகமாக முடித்துவைத்தார்.
நள்ளிரவில் புகார் தெரிவித்த மூதாட்டிக்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனின் செயலைப் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை காவலர்களுக்கு இன்று முதல் வார விடுமுறை