ETV Bharat / state

மாற்றுத்திறனாளி முதியவருக்கு உதவிய காவலர்கள்!

சேலம்: மாற்றுத்திறனாளி முதியவரை பாதுகாப்பாக அழைத்துவந்து, அவரின் சொந்த ஊருக்குச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் வழியனுப்பி வைத்தனர்.

முதியவருக்கு உதவிய காவல் துறை:  பொதுமக்கள் நெகிழ்ச்சி!
Old man helped by police in salem
author img

By

Published : Jul 4, 2020, 4:33 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அளித்துள்ள மத்திய, மாநில அரசுகள் அண்மையில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஏழை எளிய மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர். பொதுப் போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலேயே அதிக தூரம் பயணிக்க நேர்ந்துள்ளது.

அதேபோல இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு காவல் துறை, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளன. மேலும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு 100 ரூபாய் அபராதம் சேலம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகராஜ் என்ற 70 வயதுடைய மாற்றுத்திறனாளியான முதியவர், சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆட்டையாம்பட்டியில் இன்று நடந்து சென்றார். மாற்றுத்திறனாளியான இவர் நடந்து சென்றதை பார்த்த ஆட்டையாம்பட்டி பொதுமக்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் இது குறித்து கூறினார். இதையடுத்து, முதியவரிடம் காவலர்கள் விசாரித்தனர்.

அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான காளப்பநாயக்கன்பட்டிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னர், அவருக்குத் தேவையான உணவு வழங்கி, அவரை ஆசுவாசப்படுத்தினர். முதியவர் நாகராஜை தங்களது ஏற்பாட்டில், அந்த வழியாக சென்ற கனரக வாகனம் மூலம் காளப்பநாயக்கன்பட்டிக்கு செல்ல உதவினர். தனது நிலையை அறிந்து மனிதாபிமானத்தோடு உதவிய காவலர்களுக்கு முதியவர் நாகராஜ், நன்றி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.