தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி அனைத்து காவல் துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதில் காவல் துறை வாகனங்களில் தற்போது போலீஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இனி, காவல் என தமிழில் எழுத வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். சேலம் காவல் துறைக் கண்காணிப்பாளர் தீபா கணிகர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை வாகனங்களில் இருக்கும் போலீஸ் என்னும் ஆங்கில வார்த்தையை அகற்றிவிட்டு, காவல் என தமிழில் எழுத உத்தரவிட்டார்.
இதன்படி சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை காவல் துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து வாகனங்களிலும் ஏற்கனவே இருந்த போலீஸ் என்ற ஆங்கில வார்த்தையை அழித்துவிட்டு, காவல் என தமிழில் ஸ்டிக்கர் மற்றும் பெயிண்டால் எழுதப்பட்டது.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்