தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அப்போது, அதிக மழை பெய்து வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை படகு மூலம் மீட்கும் முறைகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 200 காவலர்களுக்கு இந்த பயிற்சியளிக்கப்பட்டது.
காவல்துறையின் கமாண்டோ படையைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட குழு நேற்றைய தினம் காவலர்களுக்கு விளக்க உரையளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கன்னங்குறிச்சியில் மூக்கனேரியில் வைத்து செய்முறை பயிற்சி செய்து காட்டப்பட்டது.
இதில் வெள்ளத்தில் மூழ்கிய நபரை மீட்டு முதலுதவி அளிப்பது எப்படி என்பதை கமாண்டோ படையினர் காவல்துறையினரைக் கொண்டு தத்ரூபமாக செய்து காட்டினர். மேலும், வெள்ளம் சூழ்ந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை எப்படி பாதுகாப்பு சாதனமாக மாற்றுவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.
இதையும் படிங்க: 'இத அப்பவே கேட்டிருக்கலாம்...!' - முதலமைச்சருக்கு துரைமுருகன் அறிவுரை