ETV Bharat / state

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - வலுக்கட்டாயமாக 13 விவசாயிகள் கைது

சேலம்: சங்ககிரி அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 13 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

protest
author img

By

Published : Jul 10, 2019, 10:50 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி சின்னகவுண்டனூர் அருகேயுள்ள கலியனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கார்த்திகேயன். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் கார்த்திகேயனின் தோட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க அலுவலர்கள் அளவீடு செய்துள்ளனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெருமாள், மற்றும் ராஜேந்திரன், பழனிசாமி உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் என 13 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட விவசாயிகள்

விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு ஒப்புதல் வழங்கிய பின்பே உயர் மின்னழுத்த கோபுர பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு இருந்துவருகிறது. ஆனால் அதனை மதிக்காமல் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைப்பதற்காக விவசாயிகளை தாக்கி அராஜக செயலில் ஈடுபட்டுவரும் அலுவலர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

Intro:சேலத்தில்உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 13 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.Body:

சேலம் மாவட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பதிமூன்று பேரை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி சின்ன கவுண்டனூர் அருகிலுள்ள கலியனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் தோட்டத்தில் அவரின் அனுமதி பெறாமல் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதனை கண்டித்த கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் 13 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு ஒப்புதல் வழங்கிய பின்பு புகழூர் முதல் ரைக்வர் வரை உயர் மின்னழுத்த போன்ற பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு இருந்தும் அதனை மதிக்காமல் விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்க விவசாயிகளை தாக்கி அதிகாரிகள் தொடர்ச்சியாக அராஜக செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சங்ககிரி பகுதியில் விவசாயிகளை தாக்கி உயர் மின் அழுத்த கோபுர பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

Conclusion:
மேலும் விவசாயிகளுடன் நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, ராஜேந்திரன், பழனிசாமி உள்ளிட்டு விவசாய சங்க நிர்வாகிகள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.