சேலம் மாவட்டம் ராஜகணபதி கோயில் அருகே லலிதாம்பிகை என்ற தனியார் நகை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளர் தங்கராஜ் என்பவர், நகை மற்றும் பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய மக்கள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய தங்கராஜ் தலைமறைவாகினார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் 400க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் மூடப்பட்டிருந்த நகை கடையை திறந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடையில் வைத்திருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நகைக் கடைக்குள் பரிசு பெட்டகங்கள் அதிகளவில் இருந்ததால் அவை அனைத்தையும் திறந்து பார்த்து அதனுள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்தினர். மேலும் கடைகளில் இருந்த அனைத்துப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடி தொடர்பாக பணத்தை இழந்த மக்கள் 400க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வங்கி ஊழியரிடம் ரூ.5.5 லட்சம் திருட்டு; திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!