சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டமானது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வந்திருந்தார்.
அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து தனக்கு இருக்கை ஒதுக்க அலுவலர்களிடம் முறையிட்டார். முறையான பதில் இல்லாததால் அவர் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
உடனே சமாதானம் செய்த அலுவலர்கள் அவரின் கையைப் பிடித்து ஆய்வுக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தேயிலை தோட்ட கழகத்தை மூடுவது ஏற்புடையதல்ல: புதிய தமிழகம் கட்சி தலைவர்