தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளைக் கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து சூரமங்கலம் உழவர் சந்தையில் பொதுமக்களுக்குத் துணிப் பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினர்.