ETV Bharat / state

கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் ! - சேலம் கிருஷ்ணன் புதூரில் பொதுமக்கள் சாலை மறியல்

சேலம்: அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூரில் அம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அம்மன் கோயிலை அகற்றிய அலுவர்கள்
author img

By

Published : Nov 19, 2019, 5:03 PM IST

சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் விநாயகர் ஆலயம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆலயத்திற்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர். பின்னர், அம்மன் சிலை வைக்கப்பட்ட இடத்தில் தகரத்தால் ஆன மேற்கூரை அமைத்தனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தெருவில் அம்மன் சிலையை சிலர் வைத்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதை அகற்ற வேண்டும் என மனு கொடுத்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயிலை அகற்றவும் அம்மன் சிலையை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இன்று காலை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில், இந்து சமய அறநிலைத் துறை அலுவலர்களும் சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் கவிதா, தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் கோயில் உள்ளப் பகுதிக்குச் சென்றனர்.

பின்னர் அம்மன் சிலையை இந்து சமய அறநிலைத் துறை அலுவலர்கள் அங்கிருந்து அகற்றி கோயிலின் மேற்கூரையை அகற்றினர். அகற்றப்பட்ட அம்மன் சிலை அம்மாபேட்டை பகுதியில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அம்மன் கோயிலை அகற்றிய அலுவர்கள்

அம்மன் சிலையை அகற்றியதை எதிர்த்து அப்பகுதிமக்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 20 பெண்கள் உட்பட 30 பேரை அம்மாபேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயில் அகற்றப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கிருஷ்ணன் புதூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் கார் திருடியவர் கைது!

Intro:சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூரில் அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றிய போது மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 30 பேர் கைது.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பால் பரபரப்பு

Body:சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ளது கிருஷ்ணன் புதூர். இந்தப் பகுதி சேலம் மாநகராட்சியில் 36 வது டிவிசனின் உள்ளது.

இந்தப் பகுதியில் விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த விநாயகர் ஆலயம் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அம்மன் சிலையை சில மாதங்களுக்கு முன்பு வைத்தனர். பின்னர் அம்மன் சிலையின் முன்புறம் தகரத்தால் ஆன மேற்கூரை அமைத்தனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தெருவில் அம்மன் சிலையை சிலர் வைத்துள்ளனர். இதை அகற்ற வேண்டும் என மனு செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவிலை அகற்றவும், அம்மன் சிலையை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இன்று காலை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும், சேலம் மாநகராட்சி உதவி ஆணையாளர் கவிதா, தாசில்தார் மாதேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கோவில் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அம்மன் சிலையை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றி கோவிலில் மேற்கூரை அகற்றினர். அகற்றப்பட்ட அம்மன் சிலை அம்மாபேட்டை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனையடுத்து 20 பெண்கள் உட்பட 30 பேர் அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர் இவர்கள் அனைவரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தக் கோவில் அகற்றும் பிரச்சனையால் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் கிருஷ்ணன் புதூர் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சேலத்தில் கோவில் அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.