ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரைக் கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு! - people protest in salem

சேலம்: குடியிருப்புப் பகுதியில் கழிவுநீரைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், டாங்கர் லாரியை சிறைப்பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest against sewage mixing in Residential area
author img

By

Published : Oct 28, 2019, 10:34 PM IST

Updated : Oct 28, 2019, 11:00 PM IST

சேலம் மாநகராட்சி 15ஆவது கோட்டத்திற்குட்பட்ட மரவனேரி அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில், திருமணி முத்தாறு அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், சேலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் கொண்டுவந்து கொட்டப்படுவதாகவும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடையில் திறந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு, பெரியவர்கள், குழந்தைகள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அவர்களின் புகார்.

இந்நிலையில், இன்று காலை டாங்கர் லாரி மூலமாக கொண்டுவரப்பட்ட கழிவுநீரை அங்குள்ள சாக்கடையில் திறந்து விட முயற்சிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள்

இதுகுறித்து பொதுமக்கள், இங்கு அமைக்கப்பட்டிருக்கும் சுத்தகரிப்பு நிலையம் முறையாக செயல்படுவதில்லை என்பதால், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டுவரப்படும் கழிவுநீர் திருமணி முத்தாறிலும், அருகே உள்ள இப்பகுதி சாக்கடையிலும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினர்.

இதையும் படிங்க: அமைச்சர் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Intro:சேலத்தில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீரை கலப்பதற்கு எதிர்ப்பு: செப்டிக் டேங்க்கர் வாகனம் சிறைப்பிடிப்பு
Body:
சேலம் மாநகராட்சி 15 வது கோட்டத்திற்கு உட்பட்ட மரவனேரி அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில், திருமணி முத்தாறு அருகே மாநகராட்சி சார்பில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படும் போதே, அப்பகுதி மக்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இது போன்ற கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த நிலையம் அமைக்கப்பட்டு அதன் பாரமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த சுத்தகரிப்பு நிலையத்தில் சமீபகாலமாக, சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கபடும் செப்டிக் டேங்க் கழிவு நீரையும் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும், இந்த கழிவுகளை முறையாக சுத்தகரிப்பு செய்திடாமல், அப்படியே சாக்கடையில் கலப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பல சமயங்களில் வாகனங்களில் கொண்டு வரப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை சுத்தகரிப்பு நிலையத்தில் விடாமல், வெளியே உள்ள சாக்கடைகளிலும், காலியாக உள்ள மனைகளிலும் திறந்து விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு தொற்று நோயும் உருவாகுவதாவும், குறிப்பாக குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் உருவாகுவதாகவும், இதனை தடுத்திட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் இன்று காலை, வாகனத்தின் மூலமாக கொண்டு வரப்பட்ட செப்டிக் டேங்க் கழிவு நீரை அங்குள்ள சாக்கடையில் திறந்து விட முயற்சிப்பதை கண்ட அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொது மக்களை சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து பொது மக்கள் கூறும் போது, சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து நாள் தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை இங்கு வந்து திறந்து விடுவதாகவும், இங்கு உள்ள சுத்தகரிப்பு நிலையம் முறையாக செயல்படுவதில்லை என்பதால், அந்த கழிவுகளை அப்படியே திருமணி முத்தாற்றிலும், அருகே உள்ள சாக்கடை கால்வாயிலும் திறந்து விடுகின்றனர் என்றும் இதனால் இங்கு வசிக்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் வேதனையோடு தெரிவிக்கும் அவர்கள், இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பொது மக்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

visual send mojo Conclusion:
Last Updated : Oct 28, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.