சேலம்: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி.முருகானந்தம், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ஏ.எல்.தங்கராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் சிவமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ். ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆர். அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது மேலே குறிப்பிட்ட அனைவரும் தங்களை அதிமுக(ஈபிஎஸ் அணி) இணைத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் ஓபிஎஸ் அணி ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி.முருகானந்தம், “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தும் போது மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டு வந்த தன்னிடம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வேட்பாளராகச் செந்தில் முருகன் என்பவரை அறிவித்தனர். என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு மாவட்டச் செயலாளருக்குத் தெரியாமல் வேட்பாளரை அறிவித்தது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. எனவே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்து, தற்போது விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டோம். ஓபிஎஸ் ஆதரவில் ஈரோடு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட 106 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் அனைவரும் விரைவில் அதிமுகவிற்கு வருவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து டார்கெட் செய்யப்படும் நாதக வேட்பாளர்