ETV Bharat / state

Tomato: ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் - பிரபல நடிகர் தொடங்கி வைப்பு! - சேலம்

சேலத்தில் ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற சலுகையை நடிகர் பெஞ்சமின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

purchase one helmet get free one kg tomato in Salem
ஒரு ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்
author img

By

Published : Jul 14, 2023, 2:21 PM IST

ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்

சேலம்: கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. ஆகையால், தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் நகரங்களுக்கு அன்றாடம் வரும் தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்து உள்ளது.

இதனால் தக்காளியின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய குடும்பத்தினர் தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் வாரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை மேலும் உயரும் என்று தக்காளி வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதனால் தமிழ்நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு சங்க பண்டக சாலைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் பொது மக்களுக்கு இந்த திட்டம் என்பது முழுமையாக பயன் அளிக்காத வகையில் உள்ளது என்றே சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்படுவதாலும், தக்காளி விரைந்து விற்றுத் தீர்ந்து விடுவதாலும் பெரும்பாலான மக்கள் தக்காளியை கூட்டுறவு பண்டக சாலைகளில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த நிலையில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஹெல்மெட் கடையில் ‘ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்’ என்ற அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை இந்த சலுகை விற்பனையை பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். 349 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கியவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்கி அத்துடன் தக்காளியையும் இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.

இச்சலுகை இன்று மற்றும் நாளை என 2 தினங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இது போன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக நடிகர் பெஞ்சமின் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை போன்றது சமையலுக்கு தக்காளியின் அவசியமும் என்றும், அதனால் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதை பொதுமக்களின் மனதில் பதிய வைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு சலுகை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மரங்களின் வரலாற்றை அறியும் QR கோடு: சுற்றுலா பயணிகளை கவர்ந்த அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.