ETV Bharat / state

கரோனாவிலிருந்து மீண்ட காவலர்கள் - ஆதரவற்றோருக்கு உதவி

சேலம்: கரோனாவிலிருந்து மீண்ட காவலர்கள் அதைக் கொண்டாடும் விதமாக ஆதரவற்றோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகளுக்குச் சென்று உதவி செய்தனர்.

ஆதரவற்றோருக்கு காவலர்கள் உதவி
ஆதரவற்றோருக்கு காவலர்கள் உதவி
author img

By

Published : Jul 11, 2020, 8:02 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 13 காவலர்களுக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம், சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு, தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கரோனாவில் இருந்து மீண்டதைக் கொண்டாட முடிவு செய்த காவல்துறையினர் ஆதரவற்றோர் இல்லங்கள், பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். பின்னர் ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பிரியாணி, முகக் கவசம், கிருமி நாசினிகளை வழங்கினர்.

தொடர்ந்து பெண்களுக்கு உணவளித்த காவலர்கள் அவர்களோடு அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். இறுதியாக பெண்களுக்கு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் முகக் கவசம், கிருமி நாசினிகள், கையுறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினார். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.