ETV Bharat / state

நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் - ஏழை எளிய மக்களுக்கு கோழி குஞ்சுகளை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்

சேலம்: நகர்ப்புற ஏழை, எளிய பொதுமக்களுக்கு கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 425 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

poultry farming
poultry farming
author img

By

Published : Feb 22, 2020, 3:35 PM IST

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், நகர்ப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று தொடங்கப்பட்டது. கருப்பூர் பேரூராட்சி நகரக்கழகச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சிக்கனம்பட்டி, காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த 391 பெண்களுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வீதம் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தினை ஓமலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.

ஏழை எளிய மக்களுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல்

இதேபோன்று காடையாம்பட்டி ஒன்றியத்திலும் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒரே நாளில் 4 ஆயிரத்து 425 பயனாளிகளுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: மதம், சாதி குறிப்பிடவில்லை என்றால் பள்ளியில் இடமில்லையாம் - காரணம் இதுதான்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.