ETV Bharat / state

சேலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்!

author img

By

Published : May 18, 2019, 9:59 AM IST

சேலம்: ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென்று கவிழ்ந்து விபத்துள்ளாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஒட்டுநர் உயிர் தப்பினார்.

சேலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்!

தூத்துக்குடி உப்பளம் பகுதியில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு நேற்று இரவு உப்பு மூட்டையை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட லாரி ஒன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆர்சி செட்டிப்பட்டி ரவுண்டான அருகே சர்வீஸ் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒட்டுநர் தன் கட்டுபாட்டை இழந்ததால் சாலையின் இடது புறம் லாரி கவிழுந்தது.

இதில் உடனடியாக ஓட்டுநர் லாரியைவிட்டு வெளியில் எட்டி குதித்ததால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இதைதொடர்ந்து லாரி விபத்து குறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின் ஓட்டுநரிடம் விபத்து குறித்து நடத்திய விசாரணையில், இரவு முழுவதும் தூங்காமல் லாரியை ஓட்டி வந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

உப்பு மூட்டைகளை  ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

சேலம் (17.05.2019): ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற உப்பு லோடு லாரி திடீரென்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடி உப்பளப்  பகுதியில் இருந்து தெலுங்கானா மாநிலம் குத்தி என்ற இடத்திற்கு நேற்று இரவு உப்பு மூட்டை லோடு  ஏற்றிக்கொண்டு  லாரி புறப்பட்டது.

இந்த லாரியை ஓமலூரை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்து நாகராஜ் மகன் முத்து என்பவர் கிளினர் இல்லாமல் ஓட்டிகொண்டு வந்துள்ளார். 

இந்தநிலையில் இன்று மாலை ஓமலூர் அருகிலுள்ள ஆர்சி செட்டிப்பட்டி ரவுண்டான அருகே சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது இரவு முழுவதும் தூங்காமல் லாரியை ஒட்டி வந்ததால் தூக்க கலக்கத்தில் ரோட்டின் இடது புறம் உள்ள குழியில் சாய்ந்து இரண்டு முறை உருண்டு தலைகுப்புற விழுந்தது.

அப்பொழுது ஓட்டுனர் சுதாரித்துக்கொண்டு லாரியை விட்டு வெளியில் எட்டி குதித்து, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து நடந்த நேரம் அந்த வழியே எந்த வாகனங்களும் வராமல் இருந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது.

இதைதொடர்ந்து லாரி விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.