ETV Bharat / state

"நித்யானந்தா மீது நடவடிக்கை இல்லை" - நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாட முடிவு! - நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாட முடிவு

சேலம்: சிலைக்கடத்தல் தொடர்பாக நித்யானந்தா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் மனு அளிக்கவுள்ளதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு எதிராக புகார் அளிக்கும் மனுதாரர்கள்
author img

By

Published : Sep 21, 2019, 9:50 PM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நடுவே உள்ள சிவன் கோயிலை, போன ஜென்மத்தில் நான் தான் கட்டினேன் என்றும், அதன் மூலவரான சிவலிங்கம் என்னிடம் தான் உள்ளது என்றும் நித்யானந்தா சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது, பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிவலிங்கத்தை திருடிச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது புகார் அளித்த சக்திவேல் என்பவரிடம் விசாரித்தபோது," யூ டியூபில் நித்யானந்தா, சிவலிங்கம் என்னிடம் தான் உள்ளது என்று கூறியிருக்கிறார். அதனால் அவரிடமிருந்து சிவலிங்கத்தை மீட்டுத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.

நித்யானந்தாவுக்கு எதிராக புகார் அளிக்கும் மனுதாரர்கள்

சிஎஸ்ஆர் பதிவு கூட காவல்துறையினர் செய்ய மறுத்துவிட்டனர் . இதனையடுத்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறோம் . அதன் ரசீது எங்களிடம் உள்ளது. அதனை கொண்டு மேட்டூர் நீதிமன்றத்தில் புகாரை பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரை பதிவு செய்ய வலியுறுத்தவும் கோரி மனு அளிக்க இருக்கிறோம் என்றார்.

இந்தப் புகார் தொடர்பாக கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சக்கரபாணி (பொறுப்பு)யிடம் விசாரித்தபோது," சிவலிங்கம் இருந்ததற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் ஒப்படைக்கவில்லை. அதை ஒப்படைக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகவும் கூறியிருக்கிறோம். ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் " என்றார்.

இதையும் படிங்க:

நித்யானந்தா மீது கொளத்தூர் காவல்நிலையத்தில் சிலை கடத்தல் புகார்

Intro:நித்யானந்தாவிடம் இருந்து சிவலிங்கத்தை மீட்டு தரக்கோரிய புகார் மனு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதிருப்தியடைந்த புகார்தாரர்கள் மேட்டூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மீது மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.Body:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நடுவே உள்ள சிவன் கோவிலை, போன ஜென்மத்தில் நான்தான் கட்டினேன் என்றும் அதன் மூலவரான சிவலிங்கம் என்னிடம் தான் உள்ளது என்றும் நித்தியானந்தா சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீது, பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சிவலிங்கத்தை திருடிச் சென்றதாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் மீது கொளத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று புகார்தாரர்கள் தெரிவிக்கின்றனர் .

இதுதொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது புகார் அளித்த சக்திவேல் என்பவரிடம் விசாரித்தபோது," யூ டியூபில் நித்யானந்தா, சிவலிங்கம் என்னிடம் தான் உள்ளது என்று கூறியிருக்கிறார். அதனால் அவரிடமிருந்து சிவலிங்கத்தை மீட்டுத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

ஆனால் போலீசார் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர் .

சி எஸ் ஆர் காப்பி பதிவு கூட போலீசார் செய்ய மறுத்துவிட்டனர் . இதனையடுத்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறோம் .

அதன் ரசீது எங்களிடம் உள்ளது .அதனை கொண்டு மேட்டூர் நீதிமன்றத்தில் புகாரை பதிவு செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரை பதிவு செய்ய வலியுறுத்தவும் கோரி மனு அளிக்க இருக்கிறோம்.

நித்தியானந்த சிவலிங்கத்தை தொடர்பாக இன்று மேச்சேரி அறநிலை துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்தனர் அவர்களிடமும் புகார் அளித்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:
இந்த புகார் தொடர்பாக கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சக்கரபாணி (பொறுப்பு) யிடம் விசாரித்தபோது," சிவலிங்கம் இருந்ததற்கான ஆதாரங்களை மனுதாரர்கள் ஒப்படைக்கவில்லை.

அதை ஒப்படைக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அணுகவும் கூறியிருக்கிறோம்.

ஆதாரம் இருக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் " என்று தெரிவித்தார் .

சிவலிங்கத்தை நித்தியானந்தா எடுத்துச் சென்றதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடமும் புகார் மனு அளிக்க கொளத்தூர் சக்திவேல் தரப்பினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.