சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்தத் தொழில் பூங்கா வளாகத்தில் கால்நடை பண்ணை, கால்நடை மருத்துவமனை, பால் உப பொருள்கள் உற்பத்தி நிலையம், கால்நடைகளின் இறைச்சியினை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கான மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
தொழிற்பூங்கா விழாவிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி 2020-21ஆம் ஆண்டு முதல் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்கள் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 32 நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. இந்த ஆம்புலன்சில் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான அறுவை அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மருத்துவர் குழுவும் இடம்பெறும். இதற்காக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.