சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவானது சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டிக் கிடந்தது. இதனால் இந்தப் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறியது. எனவே இதனை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.
தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள், முதியவர்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சி சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களில் பூங்கா மது பிரியர்களின் கூடாரமாக மாறாமல் இருக்க பூங்கா வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், தற்போது புனரமைக்கப்பட்டு உள்ள பூங்காவினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமெனவும் ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.