எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதேபோல், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாணவர்கள் தேர்வெழுத 18 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சுமார் 16 ஆயிரத்து 699 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: சேலத்தில் 18 மையங்களில்
16,699 மாணவர்கள் எழுதுகின்றர்!
சேலம்(04.05.2019: சேலம் மாவட்டத்தில் 18 மையங்களில் சுமார் 16,699 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வை ஞாயிற்றுக்கிழமை எழுத உள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இத்தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 520 மையங்களில் இத்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 18 மையங்களில் 16,699 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி தேர்வு நடத்தும் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத சேலம் மையங்களுக்கு வருகின்றனர்.
நீட் தேர்வு பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதனிடையே தேர்வு மையங்களுக்கு மாணவர்களை முன்கூட்டியே அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்வு நேரமான 3 மணி நேரத்திற்கு முன்பாக ஓ.எம்.ஆர். தாளில் உள்ள தகவல்களை நிரப்ப கூடுதலாக 15 நிமிடம் அனுமதி தர வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.