நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணன் எம்எல்ஏ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை எடுத்துச்சொல்லி கிராம மக்களிடம் முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடைபெறுகிற அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
அதனால் தான் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வியூகங்களால் தான் இந்த மகாத்தான வெற்றி கிடைத்துள்ளது. இனிவர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... அதிமுகவினர் குதூகலம்