சேலம் நான்கு ரோடு சந்திப்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கரட்டு முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 8 ஆயிரம் சதுர அடி அளவிலான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்ததின் பேரில் திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையிலானோர் ஆய்வு செய்து நில அளவை செய்தனர்.
நில அளவையில் கோயிலுக்கு சொந்தமான மற்றும் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 9000 சதுர அடி நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்ததையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தினை நீதிமன்ற உதவியுடன் மீட்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். சேலம் மாநகரின் எப்போதும் பரபரப்பாக நிறைந்த பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.