சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய புதிய பேருந்து நிலையத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வணிக வளாகக் கட்டடம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் புதிய வணிக வளாகக் கட்டடங்களை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியக் கடைகள் அமைக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
அனைத்துப் பணிகளும் முடிவும் தருவாயில் உள்ளதால், அடுத்த ஒரு மாத காலத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க:
விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு - காவல் துறைக்கு பாராட்டு