ETV Bharat / state

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சேலத்தில் ஆலோசனை! - Salem monsoon precautions meeting

சேலம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பருவமழை முன்னேச்சரிக்கை குறித்து சேலத்தில் ஆலோசனை!
author img

By

Published : Oct 23, 2019, 10:45 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, சேலத்தில் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர காவல் துறை, மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை சார்பில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களை அமைப்பது குறித்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Intro:வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Body:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதனை அடுத்து சேலத்தில் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல்துறை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் தற்போது தீவிரமடைந்துள்ள பருவமழையை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களை அமைப்பது குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்தும், ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைப்பது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பேட்டி: சதீஷ் - மாநகராட்சி ஆணையாளர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.