ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ஆணையை வழங்கிய எம்எல்ஏ!

சேலம்: முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள உதவித் தொகை ஆணையை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிய எம்எல்ஏ வெற்றிவேல்

author img

By

Published : Jul 27, 2020, 7:17 PM IST

Updated : Jul 27, 2020, 7:27 PM IST

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் குறை தீர்க்கும் முகாம்களின் மூலம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதை உடனடியாக பரிசீலனை செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் படிப்படியாக உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 27) காடையாம்பட்டி வட்டாரத்தில் வசிக்கும் ஏழை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 25 பேருக்கு சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மாதா மாதம் வழங்கப்படும் உதவித் தொகைக்கான ஆணையை ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் வழங்கினார்.

இந்நிகழ்வில் மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் அன்னபூரணி, வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, அதிமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் சீட்... ரூ.50 லட்சம் உதவித்தொகை

Last Updated : Jul 27, 2020, 7:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.