ETV Bharat / state

தார் சாலை அமைக்கும் பணி: தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. - சேலம் ஓமலூர்

சேலம்: ஓமலூர் அருகே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

vetrivel
vetrivel
author img

By

Published : Sep 24, 2020, 12:46 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணியினை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் பூமி பூஜை செய்து இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பனங்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் தார் சாலை மற்றும் சீரங்கன வளவு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தார் சாலை பணியை தொடங்கிவைத்த அமைச்சர்
தார் சாலை பணியை தொடங்கிவைத்த அமைச்சர்

முன்னதாக தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வந்த சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேவுக்குஅதிமுக தொண்டர்கள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர் .

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.