ETV Bharat / state

நடந்து சென்று வாக்கு சேகரித்த முக ஸ்டாலின்! - முக ஸ்டாலின் செய்திகள்

சேலம்: சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

நடந்து சென்று வாக்கு சேகரித்த முக ஸ்டாலின்!

author img

By

Published : Mar 16, 2021, 2:20 PM IST

சேலம் கெஜல்நாய்க்கன்பட்டி திடலில் திமுக சார்பில் வீரபாண்டி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் பரப்புரை செய்கிறார்.

அதற்காக இன்று (மார்ச் 16) காலை சேலம் வந்த முகஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு திடீரென்று திமுகவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரனை உடன் அழைத்துக் கொண்டு, செவ்வாய்ப்பேட்டை மார்கெட் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

நடந்து சென்று வாக்கு சேகரித்த முக ஸ்டாலின்!

மார்க்கெட் பகுதிகளில் நடந்து சென்று மூட்டை தூக்கும் தொழிலாளிகள் மத்தியில் ஸ்டாலின் வெகு இயல்பாக நடந்து சென்று வாக்கு சேகரித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.