ETV Bharat / state

ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் - அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு! - tourists

ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு படகு இல்லத்தில் புதிதாக மிதக்கும் உணவகம்- அமைச்சர் மதி வேந்தன் ஆய்வு!

author img

By

Published : May 27, 2022, 11:30 AM IST

Updated : May 27, 2022, 12:52 PM IST

சேலம், மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து படகில் அமர்ந்து ஏரி முழுவதும் பயணித்த அவர் ஏரியில் மிதவை உணவகம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு உள்ள ஓட்டல் தமிழ்நாடு உணவகத்திற்கு சென்று உணவு கூடங்களைப் பார்வையிட்டார்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு ஓட்டலில் மேலும் வசதிகளை மேம்படுத்தி தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் . பின்னர் அவர் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் - அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ஏற்காடு ஏரியின் அழகை ரசிக்க தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர், அவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 'குரங்கு அம்மை' குறித்த அச்சம் தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Last Updated : May 27, 2022, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.