ETV Bharat / state

வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது - அமைச்சர் சி.வி. கணேசன் தகவல் - Korimedu Government Vocational Training Centre

தமிழ்நாடு தான் அமைதியான மாநிலம் என்பதால் நிறைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது - அமைச்சர் சி.வி. கணேசன் தகவல்

author img

By

Published : Sep 6, 2022, 6:52 PM IST

சேலம் அருகே கோரிமேடு பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தொழிற்பயிற்சி நிலையம் முழுவதும் சுற்றி பார்த்து, வேறு என்ன வசதிகள் தேவை என ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச்சென்று, படிக்கும் இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சுமார் 36ஆயிரம் இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இதுதவிர 25ஆயிரம் இளைஞர்கள் முதல் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 63 விழுக்காடு பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள 66 தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 99 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது - அமைச்சர் சி.வி. கணேசன் தகவல்

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிலையை உருவாக்கிக்கொண்டுள்ளோம்‌. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் அமைதியான மாநிலம் என்று நிறைய முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டுள்ளனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.31 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.