சேலம்: அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகவும், இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.48 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 38.53 டிஎம்சி ஆகவும் உள்ளது.
பிலிகுண்டுலுவிலிருந்து அணைக்கு வரும் நீரின்வரத்து, வினாடிக்கு 12 ஆயிரத்து 168 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று(அக்.06) மாலை வரை 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு டெல்டா பாசன தேவைக்கு நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்