ETV Bharat / state

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: சாலையில் காய்கறிகளை கொட்டி போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்

author img

By

Published : Sep 6, 2020, 3:27 PM IST

Updated : Sep 6, 2020, 5:52 PM IST

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமணிமுத்தாறு ஆற்றோரப்பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் காய்கறி, பழங்கள் விற்பனை கடைகளை நடத்தி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றங்கரை பகுதியில் கடை வைத்திருப்பவர்களுக்கு மாநகராட்சி வேறு இடம் ஒதுக்கி அங்கு கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த பெண்கள் சிலருக்கு இடம் ஒதுக்கவில்லை என்று புகார் எழுந்தது.

இதனைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலையில் காய்கறிகளைக் கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

தங்களுக்கு கடைகளை ஒதுக்காமல் வேறு நபர்களுக்கு ஒதுக்கியதைக் கண்டித்தும், மீண்டும் ஆற்றங்கரையோரமாகவே கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வலியுறுத்தியும், குத்தகைதாரர் அதிக பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்கள் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றும், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் தவிர்த்து கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து பேட்டியளித்த ஆனந்தா பாலம் ஆற்றோர வியாபாரிகள் சங்க பிரதிநிதி முகமது கூறுகையில், "மாநகராட்சி எடுத்த நடவடிக்கையை திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் உள்ள வியாபாரிகள் வரவேற்கிறோம். எங்களுக்கு கடைகள் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒதுக்கப்பட்டு அதில் வியாபாரம் செய்து வருகிறோம்.

merchants protest in salem
merchants protest in salem

ஆனால், வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்வோர் தூண்டிவிடுகிறார்கள். எனவே மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துகிறோம் " என்று தெரிவித்தார்.

கரோனா நோய்த்தொற்று அபாயம் உள்ள சூழலில் 300க்கும் மேற்பட்டவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Last Updated : Sep 6, 2020, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.