சேலம்: தாரமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் சென்றுள்ளார்.
அப்போது பள்ளியிலிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் எழுப்பி அழுதுள்ளார். இதனை அறிந்த, தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் போதை ஆசாமியை பள்ளியை விட்டு விரட்டியுள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்குத் தகவல் அளித்த பள்ளி ஆசிரியர்கள், அவர்களுடன் மாணவியை அனுப்பிவைத்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: Maanaadu: பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?