ETV Bharat / state

ஊரடங்கை மீறி இறைச்சி விற்ற இருவர் கைது - இறைச்சி விற்ற நபர் கைது

சேலம்: முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Man arrested for selling meat in violation of curfew in salem

author img

By

Published : Apr 27, 2020, 11:21 AM IST

சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதைத் தடுக்கும் விதமாக மாநகரம் முழுவதும் நேற்றிலிருந்து வரும் 28ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும், இந்த முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள் தவிர, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட எந்தக் கடைகளும் திறக்கக் கூடாது என்றும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேவந்தால் வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Man arrested for selling meat in violation of curfew in salem
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி

அதன்படி, சேலம் மாநகரம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், முகமது புறா எனும் பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி, வீட்டிலேயே ஆட்டு இறைச்சி விற்பனை செய்த காஜா மொய்தீன், அயாக்பாஷா ஆகிய இருவரை டவுன் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 10 கிலோ ஆட்டு இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: ரகசிய இறைச்சி விற்பனையை ஊக்குவித்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.