ETV Bharat / state

காதலியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை மணந்த இளைஞன்! - சேலம்

சேலம்: காதலித்து கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை மணந்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் மீது புகார்
author img

By

Published : Apr 29, 2019, 2:08 PM IST

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி. இவரின் உறவினர் மகன் கார்த்திக். கடந்த மூன்று வருடமாக இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகியதால் இளவரசி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனையறிந்த இளவரசியின் பெற்றோர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து புகாரை விசாரித்த திருச்செங்கோடு காவல் துறையினர், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இளவரசிக்கும் கார்த்திக்கிற்கும் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்களிலேயே வேலை தேடுவதாக இளவரசியிடம் கூறிச்சென்ற கார்த்திக் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை.

இந்நிலையில் இளவரசிக்கு அவரது கணவர் கார்த்திக் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த இளவரசி மற்றும் அவரது பெற்றோர் இது குறித்து கொளத்தூர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் இளவரசி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்து தனது கணவரை மீட்டுத் தரும்படியும் புகார் அளித்தார்.

இளம் பெண் ஒருவர் தன் கணவனை மீட்டுத் தருமாறு புகார் அளித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:சேலம் அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்ப்பிணி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Body:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி. இவரின் உறவினர் மகன் கார்த்திக் சேலம் மேட்டூர் கொளத்தூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் இளவரசி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த இளவரசியின் பெற்றோர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் அளித்துள்ளனர் .

அதைத் தொடர்ந்து புகாரை விசாரித்த திருச்செங்கோடு காவல்துறையினர், கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி இளவரசிக்கும் கார்த்திக்கிற்கும் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இளவரசி கார்த்திக் தம்பதியினர் மேட்டூர் அருகிலுள்ள கொளத்தூரில் உள்ள கார்த்திக்கின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்களிலேயே வேலை தேடுவதாக இளவரசியிடம் கூறிச்சென்ற கார்த்திக் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. பின்னர் இளவரசியிடம் போனில் கூட கார்த்திக் பேசவில்லை.

மேலும் இளவரசியின் மாமனாரும் மாமியாரும் வீட்டிற்குள்ளேயே , அவரை அடைத்து வைத்து வேறு யாரிடமும் பேச விடாமல் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இளவரசியின் பெரியப்பா மகள் மைதிலியை தற்போது கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக, அவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இளவரசி தனது பெற்றோரிடம் தகவலைக் கூறி இருக்கிறார்.

இதையடுத்து இளவரசியின் பெற்றோர் அவருடன் சேர்ந்து கொளத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளவரசி தனது பெற்றோருடன் வந்து கணவரை மீட்டுத் தரும்படியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் திருமணத்திற்கு முன்பே எனது கணவருடன் தொடர்பு நெருக்கமான தால் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நிலையில் அவர் தனது பெற்றோரின் பேச்சைக் கேட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் எனக்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:தன்னை ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் இளவரசி , சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீரோடு புகார் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.