ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்க கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி - பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல்

பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்க கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி பேட்டி
author img

By

Published : Jan 20, 2022, 6:51 PM IST

சேலம்: எடப்பாடியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை. அதனால், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக மக்கள் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

ஊடகங்கள் விவாதிக்கவில்லை

ஆனால், இதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை. அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் முறைகேடுகள் குறித்து செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. ஆனால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினமும் பேட்டி மட்டும் அளிக்கிறார்.

அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

பொய் வழக்கு

திமுக அரசின் பழிவாங்கும் செயலாகவே இதைப் பார்க்கிறோம். பொய் வழக்கு, அவதூறு ரெய்டு என்று திமுக அரசு செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த உயர் நீதிமன்றம் நேர்மையாக தேர்தலை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

எனவே, வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசு நேர்மையாக நடத்த வேண்டும்.

கூட்டுக் குடிநீர் திட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் காலையில் எழுந்து சைக்கிள் ஓட்டி டீ குடித்து விட்டு சென்று விடுகிறார். எந்தத் திட்டங்களை புதியதாக அவர் கொண்டு வந்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே அவர் தற்போது திறந்து வைக்கிறார். கூட்டுக் குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: வர்லாம் வா வர்லாம் வா! - ரெய்டுக்கு அழைப்புவிடுக்கும் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.