ETV Bharat / state

சேலத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து - உதவியாளர் கைது - நீதிபதியை கத்தியால் குத்தியவர் கைது

சேலம் நீதிமன்றத்தில் நீதிபதியைக் கத்தியால் குத்திய உதவியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் நீதிபதிக்கு கத்தி குத்து
சேலத்தில் நீதிபதிக்கு கத்தி குத்து
author img

By

Published : Mar 1, 2022, 9:45 PM IST

சேலம்: சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி பொன்பாண்டி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவரது அறைக்கு வந்து அமர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37) என்பவர் நீதிபதி அறைக்கு வந்து, இடமாறுதல் தொடர்பாகப் பேசியுள்ளார்.

இதற்கு நீதிபதி பொன்பாண்டி, இது குறித்து மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலக உதவியாளர் பிரகாஷ் கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதியைக் குத்தினார். இதில் அவரது இடது மார்பில் காயம் ஏற்பட்டது.

நீதிமன்ற ஊழியர்கள் உடனே நீதிபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். நீதிபதியைக் கத்தியால் குத்திய அலுவலக ஊழியர் பிரகாஷை மற்ற ஊழியர்கள் பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, நீதிபதி பொன்பாண்டி அலுவலகம் வந்து விசாரணை செய்தார். பின்னர் அவர் காயமடைந்த பொன்பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கைதான பிரகாஷ் சேலம் அன்னதானப்பட்டி அருகேவுள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆவார். பணி மாறுதல் கேட்டு வழங்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அலுவலகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.