ETV Bharat / state

சேலம் விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன்; காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை..! - salem news

Salem Farmer ED Summon Issue: சேலம் விவசாயிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக, விவசாயிகள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருகைதந்தனர்.

Salem Farmer ED Summon Issue
சேலம் விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 9:02 PM IST

சேலம் விவசாயிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம்

சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அப்பமசமுத்திரம் அருகே உள்ள ராமநாயகன் பாளையம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பாஜகவின் இலக்கிய அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, இதற்காக பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விவசாயிகளுக்கு விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஆத்தூர் காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளும் உள்ளன. இதற்கிடையே தான், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தரப்பில் இருந்து, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சாதி பெயருடன் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க அமலாக்கத்துறை அளித்த சம்மனில் விவசாயிகளின் சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மாலை (ஜன.01) சேலம் ஊரக டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் விவசாயிகளின் வீட்டிற்குச் சென்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படியும் தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (ஜன.02) இரண்டு விவசாயிகளும் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருகைதந்தனர்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள், "அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் சாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது தவறானது என்றும் இது குறித்த கேள்விக்கு அதிகாரிகள் எந்த ஒரு பதிலும் கூறவில்லை" என்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், சாப்பாட்டிற்கே வழியில்லாத எனக்கு சொத்து குவிப்பு வழக்கு குறித்த சம்மன் அனுப்பியதற்கு முழு காரணம் பாஜக பிரமுகர்கள் தான். மேலும், என்னை மிரட்டியும் கொலை செய்து விடுவேன் என்று கூறியும் பாஜகவைச் சேர்ந்த பழனிவேல் மற்றும் குணசேகரன் இருவரும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாமீன்; விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.