ETV Bharat / state

சந்திரயான்-3 விண்கல உபகரணங்களை வழங்கிய சேலம் உருக்காலைக்கு ISRO பாராட்டு!

சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய எல்.வி.எம்-3 எம் 4 ராக்கெட்டில் வெப்பத்தைத் தாங்கும் குளிர்ந்த உருட்டுத் தகடுகளை வழங்கிய சேலம் உருக்காலைக்கு, இஸ்ரோ அமைப்பின் திரவ இயக்க மையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 9:35 PM IST

சேலம்: நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது. அதனைத் தொடர்ந்து புவி நீள் வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நிலவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் நீள் வட்டப்பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் மெதுவாகத் தரை இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிகழ்வில் குளிர்ந்த உருட்டுத் தகடுகளை உற்பத்தி செய்து வழங்கிய சேலம் உருக்காலை (Salem Steel Plant) நிர்வாகத்திற்கு திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க மையத்தின் துணை இயக்குநர் பி.மருதாசலம் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "நிலவின் தென் துருவப்பகுதியில் ஆய்வு செய்ய எல்.வி.எம்.-3 எம்4 என்ற ராக்கெட்டில் சந்திரயான் -3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதில் எல்.வி.எம்.-3 எம்4 ராக்கெட்டின் உந்து விசை இயந்திரத்தில், வெப்பத்தை தாங்கும் 2.3 மில்லி மீட்டர் அளவு கொண்ட குளிர்ந்த உருட்டு தகடுகள் (Cold rolled plates) பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வெப்பத்தைத் தாங்கும் இந்த குளிர்ந்த உருட்டுத் தகடுகள் தேவையான தர நெறிமுறைகளுடன் இஸ்ரோவுக்கு வழங்கிய சேலம் உருக்காலை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய எல்.வி.எம்.-3 எம் 4 ராக்கெட்டில் வெப்பத்தைத் தாங்கும் குளிர்ந்த உருட்டு தகடுகளை வழங்கிய சேலம் உருக்காலை நிர்வாகத்திற்கு, இஸ்ரோ அமைப்பின் திரவ இயக்க மையம் பாராட்டு தெரிவித்துள்ள செய்தி தற்போது தமிழக மக்கள் அனைவரது மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அயனோஸ்பியரில் துளை.. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.