கோவை மாவட்டத்தின் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை காந்திபுரத்தில் அடையாளம் தெரியாத ஏழு பேரால் கடுமையாகத் தாக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்திய கொலைவெறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜாமியா மஸ்ஜித் முன்பு அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தையிடம் 2 மணி நேரம் விசாரணை!