சேலம் எருமபாளையம் அருகே உள்ள பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹோமாவுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தீபாவளிக்கு ஹேமா அவரது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தநிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த சேலம் கிச்சிப்பாளையம் காவல் துறையினர் ஹேமாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? போன்ற கோணங்களில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி இரண்டு மாதத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பச்சைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா தற்கொலை செய்து கொண்டாரா ?என தற்போது விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: வேலூரில் மர்ம காய்ச்சல் 15 வயது மாணவி உயிரிழப்பு!