ETV Bharat / state

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த் அமமுகவினர் - அதிகாரிகள் விசாரணை

சேலம்: பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தாய் கழகத்தில் இணைத்துக் கொண்ட அமமுகவினர்
தாய் கழகத்தில் இணைத்துக் கொண்ட அமமுகவினர்
author img

By

Published : Feb 2, 2020, 11:42 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேராகத் தனது சொந்த ஊரான சேலத்திற்கு வந்து தனது இல்லத்தில் தங்கியுள்ளார்.

பின்னர் சென்னை செல்வதற்காகப் புறப்பட்ட முதலமைச்சரிடம் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், தங்களின் பகுதிகளில் உள்ள குறைகளை அவரிடம் மனுக்களாகக் கொடுத்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மிகக் கூடிய விரைவில் அதற்கான உரிய அதிகாரிகள் விசாரணை செய்து உரிய தீர்வினை வழங்குவார்கள் என்று உறுதியளித்தார்.

பின்னர் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். இதில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்எல்ஏ வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் சக்திவேல், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

முன்னாள் எம்எல்ஏ குருநாதன் மற்றும் ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அமமுகவினர் மற்றும் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?

Intro:(பெயர் திருத்தம் செய்யப்பட்டது.)Body:சேலம்

சேலத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் திருப்பதி சென்றிருந்தார் அங்கு சாமி தரிசனம் முடித்துக்கொண்டு கிருஷ்ணகிரி தர்மபுரி வழியாக சேலத்திற்கு வந்தார்.

சென்னை நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் வீட்டில் தங்கிய அவர் இன்று காலை சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நெடுஞ்சாலை நகர் முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை விசாரணை செய்து அவற்றுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்க உரிய துறை சார்ந்த அதிகாரிகள் முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் முதலமைச்சர் அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார் .

அப்போது சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம் எல் ஏ வெங்கடாசலம் முன்னாள் அமைச்சர் செம்மலை எம் எல் ஏ மற்றும் எம்எல்ஏக்கள் சக்தி வேல் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் முதலமைச்சருடன் இருந்தனர்.

தொடர்ந்து ஓமலூர் மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏ குருநாதன் முதலமைச்சர் முன்னிலையில் என்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.Conclusion:இந்த செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.