ETV Bharat / state

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.14 லட்சம் வழங்கல்! - Salem District Collector

சேலம்: சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் சேலம் ஆட்சியர், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளுக்கு ரூ.14.14 லட்சம் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
author img

By

Published : Oct 12, 2020, 5:41 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலத் துறையின் சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா இன்று (அக். 12) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையேற்று, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதற்கான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

2015ஆம் ஆண்டு முதல் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றது.

பெண் குழந்தைகளுக்குத் தேவையான உரிமைகளை முழுமையாக கொடுத்து அவர்களின் கல்வியை மேம்படுத்தி, பொருளாதார மேம்பாட்டிற்கும் தேவையான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி அத்தகைய அரசு திட்டங்களின் வாயிலாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி 100 விழுக்காடு எட்ட முடியும் என்பதைக் கருத்திற்கொண்டு சமுதாயத்தில் உள்ள அனைவரும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காவும், பாதுகாப்பிற்காகவும் பாடுபட வேண்டும் என்பதையும் இதுபோன்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாம் உறுதி செய்திட வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்பு முயற்சியாக சக்தி குழு உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சக்தி குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் வாயிலாக பள்ளிகளில் பயின்றுவருகின்ற பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு பள்ளி அளவில் தீர்வு காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் அலுவலர்கள், அங்கன்வாடி குழுக்கள் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் தொந்தரவு, கல்வி இடைநிற்றல் ஆகியவை முற்றிலும் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடவும், பெண் குழந்தைகள் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிடவும் அரசுத் துறைகளும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

பெண் குழந்தைகளின் பெருமையைப் போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க செய்வோம் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, துறை அலுவலர்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 37 பெண் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வைப்பு நிதி முதிர்வு பெற்று, அதற்கான முதிர்வுத் தொகை 14 லட்சத்து 14 ஆயிரத்து 258 ரூபாய்க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர், 37 பெண் குழந்தைகளுக்கு வழங்கும்விதமாக 10 பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.