ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி...  காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம்! - காவல் ஆணையாளர் அலுவலகம்

சேலம்: சிவதாபுரம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Couple petition
Couple petition
author img

By

Published : Oct 18, 2020, 4:32 PM IST

சேலம் மாவட்டம், சிவதாபுரம் அடுத்துள்ள பெருமாம்பட்டி, முக்கரையான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கௌதம்(22). பொறியியல் பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் கெங்கவல்லி அடுத்த புலியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியுமான சௌமியா(22)வும் ஃபேஸ்புக் மூலம் நட்பாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிய வர இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெண் வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சௌமியா வீட்டில், வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, பெருமாம்பட்டி பகுதியிலுள்ள விநாயகர் கோயிலில் இன்று(அக்-18) திருமணம் செய்து கொண்டனர் .

இத்திருமணத்துக்கு சௌமியா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அச்சத்தில் காதல் ஜோடி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு வழங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.