சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் நர்சிங் மாணவி மாலினி (19). இவர் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சதீஷ்குமார் (21) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கோரி சேலம் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து இருவரின் பெற்றோரையும் அழைத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெற்றோர் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம்; காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!