ETV Bharat / state

'நீயா நானானு சோடி போட்டு பார்த்துக்கலாமா சோடி' - வெங்காயத்துடன் விலையில் போட்டிப் போடும் பூண்டு! - increase in garlic prices following onion price hike

சேலம்: வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் மளமளவென அதிகரித்து கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

garlic-prices
garlic-prices
author img

By

Published : Dec 11, 2019, 8:00 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு, வெங்காயத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் வெங்காயத்திற்கு ஈடாக தற்போது பூண்டும் வரலாறு காணாத விலை உயர்வில் களம் இறங்கி இருக்கிறது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு விளைச்சல் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு விளைச்சல் மற்றும் வரத்து குறைவுதான் காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பூண்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சேலம் லீ பஜார் மண்டி மற்றும் செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பூண்டு மொத்த விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த மாதம் வரை மாதத்திற்கு 20 லோடு பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், தற்போது மாதத்திற்கு 5 முதல் 8 லோடு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இந்த பூண்டு வரத்து குறைவால், தற்போது விலை அதிகரித்து கிலோ ரூபாய் 180 ஆக உயர்ந்துள்ளது. சாதாரண ரக பூண்டு கிலோ ரூ.140 ஆகவும், நடுத்தரப் பூண்டு கிலோ ரூ.155 ஆகவும், பெரிய பூண்டு கிலோ ரூ.180 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலை உயர்வு

இதுகுறித்து, பூண்டு மொத்த வியாபாரி வேல்முருகன் கூறுகையில், 'தற்போது பூண்டு சீசன் இல்லை. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பூண்டு வருவது குறைந்து விட்டது. இதனால் தற்போது பூண்டின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இரண்டு மாதம் சென்றால்தான் பூண்டின் விலை ஏறுகிறதா? இறங்குகிறதா? எனத் தெரியவரும்' என்றார்.

வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலைவாசி உயர்வால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சேலத்தில் வெங்காய விலை குறைந்தது!

Intro:வெங்காய விலை ஏறியது போல பூண்டு விலையும் உயர தொடங்கியுள்ளது. கிலோவிற்கு ரூபாய் 20 அதிகரித்து.

Body:சேலத்தில் பூண்டின் விலை திடீரென உயரத் தொடங்கியிருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து தற்போது பூண்டின் விலையும் சேலத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

சேலம் லீ பஜார் மண்டி மற்றும் செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பூண்டு மொத்த விற்பனை கடைகள் உள்ளது.
இங்கு மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து பூண்டு கொண்டு வந்து விற்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் பூண்டு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூண்டின் விலை உயரத் தொடங்கியிருக்கிறது.

ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை பூண்டு அறுவடை சீசன். கடந்த மாதம் வரை சேலத்திற்கு மாதத்திற்கு 20 லோடு பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் தற்போது மாதத்திற்கு 5 முதல் 8 லோடு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இந்த பூண்டு வரத்து குறைவால் பூண்டின் விலை தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த வாரத்தை விட தற்போது கிலோவிற்கு ரூபாய் 20 வரை பூண்டின் விலை கூடியுள்ளது. சாதாரண ரக பூண்டு கிலோ ரூபாய் 120 இல் இருந்து ரூபாய் 140 ஆக உயர்ந்திருக்கிறது. நடுத்தரம் பூண்டு கிலோ ரூபாய் 140 லிருந்து ரூபாய் 155 ரூபாய் ஆகவும், பெரிய பூண்டு கிலோ ரூபாய் 165 இல் இருந்து 180 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரி வேல்முருகன் கூறியதாவது தற்போது பூண்டு சீசன் இல்லை இதனால் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பூண்டு வருவது குறைந்துவிட்டது. இதனால் தற்போது பூண்டின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் சென்றால்தான் பூண்டின் விலை ஏறுகிறது? இறங்குகிறது? என தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டி: வேல்முருகன் - கடை உரிமையாளர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.