சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் நடத்தப்பட்ட மதுவிலக்கு வேட்டையில் 2500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," இன்று (ஜூலை.04) சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், தலைமையில், இம்மானுவேல் ஞானசேகர், காவல் துணை கண்காணிப்பாளர்,சுமார் 30 காவலர்களுடன் கல்ராயன் மலைப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் விற்பனையில் ஈடுபடுபவதை தடுக்கும் பொருட்டு தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது.
இதில் சுமர் 2500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.