சேலம் ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. இவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், 'மோடி கதையை முடிங்கப்பா. இவனெல்லம் இன்னும் 5 வருசம் இருந்தா இந்தியா அப்படியே 50 வருடம் பின்னாடி போய்விடும். மனித வெடிகுண்டு வேண்டும்னா சொல்லுங்க நான் வரேன்' எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவானது வாட்ஸ்அப் குழுக்களில் பரவியதைத் தொடர்ந்து வழக்கறிஞரான பரிமளா தனது பதிவினை நீக்கிவிட்டு முகநூல் கணக்கை முடக்கி வைத்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை கொள்வதற்கு மனித வெடி குண்டாகவும் வரத்தயார் என்று பெண் வழக்கறிஞர் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட விவகாரம் சேலம் மாவட்ட பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் பாஜகவினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை மோடியின் ஒத்திகைதான் - திருமா!