சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் கத்தேரி கிராமத்திலுள்ள சாமியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் கவுந்தப்பாடியைச் சேர்ந்த சுந்தரராஜனின் மனைவி பத்மாவுடன் மண உறவைத் தாண்டிய காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது கணவன் அன்பரசுவை விட்டுச்சென்ற பத்மா மூன்றாவதாக தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் சாமியாம் பாளையத்திலிருந்து கத்தேரிக்குச் சென்றபோது அன்பரசு இருவரையும் வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி பத்மாவை கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
அப்போது சுதாரித்துக்கொண்ட தமிழ்ச்செல்வன் தப்பி ஓடி தேவூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததின்பேரில் விரைந்துசென்ற காவல் துறையினர் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த பத்மாவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அன்பரசை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே பத்மாவிற்கு கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த முதல் கணவர் சுந்தர்ராஜனுடன் திருமணமாகி கீர்த்தி வாசன் என்ற ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலியாக உள்ள 1,500 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம்